Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்க புதிய நிறுவனம்

அக்டோபர் 21, 2019 04:50

புதுடில்லி: இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்கும் பணியில், இனி, தேசிய அங்கீகார வாரியம் ஈடுபடாது; அதற்கு பதிலாக, புதிதாக ஒரு நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.

தற்போது, நாடு முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்குவதற்கான பணியில், என்.பி.ஏ., எனப்படும், தேசிய அங்கீகார வாரியம் ஈடுபட்டு வருகிறது. 

அதற்கு பதிலாக, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப மையங்கள் அடங்கிய அமைப்பை உருவாக்க, மத்திய மனித வள மேம்பாட்டு துறை திட்டமிட்டது.சென்னை, டில்லி மற்றும் கரக்பூரில் உள்ள, ஐ.ஐ.டி.,கள் பங்களிப்புடன் கூடிய, ஐ.எப்.ஏ.ஏ., எனப்படும் அங்கீகாரத்துக்கான ஐ.ஐ.டி., அறக்கட்டளை என்ற புதிய நிறுவனம் துவக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்துக்கான தலைமை செயல் அதிகாரி விரைவில் நியமிக்கப்பட உள்ளார். யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் உள்ளிட்டவற்றுக்கும், அங்கீகாரம் அளிப்பதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள, இந்த நிறுவனம் தயாராக உள்ளதாக, மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்