Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மராட்டியம், அரியானாவில் வாக்குப்பதிவு தொடங்கியது

அக்டோபர் 21, 2019 04:40

மும்பை: மராட்டியம், அரியானா மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வருகிற 24ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகிறது.

மராட்டியம், அரியானா மாநிலங்களின் சட்டசபை தேர்தலுடன் நாடு முழுவதும் தமிழ்நாடு (2), உத்தரபிரதேசம் (11), குஜராத் (6), கேரளா (5), பீகார் (5), அசாம் (4), பஞ்சாப் (4), சிக்கிம் (3), ராஜஸ்தான் (2), இமாசலபிரதேசம் (2), புதுச்சேரி, தெலுங்கானா, மத்தியபிரதேசம், மேகாலயா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சத்தீஷ்கார் (தலா ஒரு தொகுதி) ஆகிய மாநிலங்களில் உள்ள 51 சட்டசபை தொகுதிகளுக்கும், மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா நாடாளுமன்ற தொகுதிக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளும் 24ந்தேதி எண்ணப்படும்.

இந்த நிலையில், மராட்டியம் மற்றும் அரியானாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணியளவில் தொடங்கியது.  இதற்காக காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நாக்பூர் மத்திய தொகுதியில் காலை 8.20 மணியளவில் ஓட்டு போட்டார்.  மத்திய மந்திரி நிதின் கட்காரி மற்றும் அவரது மனைவி காஞ்சனா காலை 8.25 மணியளவில் நாக்பூர் தொகுதியில் உள்ள வாக்கு சாவடியொன்றில் வாக்களித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்