Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு முத்திரை, போலி லேபிள்: மது விற்பனை செய்து வந்த கும்பல்

அக்டோபர் 15, 2019 10:32

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே புதுச்சேரி மாநில மதுவை வாங்கி வந்து டாஸ்மாக் மதுபாட்டில்களில் நிரப்பி, அதற்கான அரசு முத்திரை, நிறுவன லேபிள்களையும் தயாரித்து ஒட்டி விற்பனை செய்து வந்த கும்பல் பிடிபட்டுள்ளது.

நெடுவாக்கோட்டை டாஸ்மாக் கடையின் பின்புறம் புதுச்சேரி மதுவகைகள் டாஸ்மாக் லேபிள் ஒட்டி விற்கப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, புதுச்சேரியிலிருந்து மதுவகைகளை கடத்தி வந்து, பயன்படுத்தப்பட்ட டாஸ்மாக் மதுபாட்டில்களில் நிரப்புவது தெரியவந்தது.

அத்துடன் போலியாக அரசு முத்திரை மற்றும் மதுநிறுவன லேபிள்களையும் தயாரித்து ஒட்டி விற்பனை செய்து வந்ததும் அம்பலமானது. இதனையடுத்து 10 ஆயிரம் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இடத்தின் உரிமையாளர் ஸ்ரீதர், ஆசைத்தம்பி உள்பட 4 பேரை கைது செய்து மது கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். 

தலைப்புச்செய்திகள்