Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கவிழ்ந்த ஆம்னி பேருந்து: போதையில் இருந்த ஓட்டுனருக்கு தர்ம அடி

அக்டோபர் 13, 2019 03:42

சேலம்: பெங்களூரில் இருந்து சேலத்திற்கு படுக்கை வசதி கொண்ட தனியார் நிறுவன ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பேருந்து தொப்பூர் டோல்கேட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது தாறுமாறாக ஓடியது.பின்னால் சென்ற காரில் இருந்தவர்கள் இதனை செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். 

ஒரு கட்டத்தில் ஓட்டுனர் முன்னால் சென்ற மற்றொரு தனியர் ஆம்னி பேருந்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது சாலையின் குறுக்கே இரும்பு பேரிகார்டை தட்டிக் கொண்டு தடுப்பில் மோதி பேருந்து அப்படியே கவிழ்ந்தது.

பேருந்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு முன்பக்க கண்ணாடி வழியாக வெளியேவந்தனர். பயணிகள் சிலர் ஓட்டுனரை மடக்கி பிடித்து அடித்து உதைத்தனர்.ஓட்டுனர் போதை மயக்கத்தில் ஆம்னி பேருந்தை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.   

பேருந்து ஓட்டுபவர் குடித்திருந்தால் ஒட்டு மொத்த பயணிகளின் உயிரும் பணயம் வைக்கப்படும் என்பதை உணர்ந்து, இதுபோன்ற குடிகார ஓட்டுனர்களை கண்டறிந்து போக்குவரத்து காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் ஓட்டுனர்களை பணியில் அமர்த்தும் பேருந்து நிறுவனங்களும் மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும் என்கின்றனர் பயணிகள்.

தலைப்புச்செய்திகள்