Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத வழக்கறிஞர்களுக்கு நோட்டீஸ்

அக்டோபர் 09, 2019 02:02

சென்னை: வழக்கறிஞருக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1547 வழக்கறிஞர்களுக்கு தொழில் செய்ய தடை விதிக்கபடும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் இறுதி  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின் படி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே வழக்கறிஞர்களாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியும் என்றும், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பார்கவுன்சிலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் இந்திய பார்கவுன்சில் அறிவித்திருந்தது.

அதன்படி 2010 ஆம் ஆண்டு ஜூலைக்கு பிறகு வழக்கறிஞராக சட்டப்படிப்பை முடித்து பார்கவுன்சிலில் பதிவு செய்த  இரண்டு ஆண்டுகளில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த குறித்த கால அவகாசத்திற்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1547 வழக்கறிஞர்களுக்கும்  தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் இன்று இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்றால், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதிற்கான சான்றிதழ்களை பார்கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்