Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மரம் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு!

அக்டோபர் 08, 2019 07:32

கும்பகோணம்: கும்பகோணத்தில் இயற்கையை நேசிப்பது, மரங்களை வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வு எங்கும் பரவி வருகிறது. ஆனால் அதை செயல்முறைப் படுத்துவது இப்பொழுதுதான் படிப்படியே தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக  ஆனந்தம் பண்ணையின் ஆனந்த்-ஆனந்தி தம்பதியர் இந்த வளர்ச்சியை, வெற்றியைக் கொண்டாடும் வகையில் மேலும் 10,000 சதுரடியில் கிட்டத்தட்ட 1400 மரங்கள் நடும் முயற்சி இன்று தொடங்கியது. 

இந்த முயற்சியில் ஆனந்தம் பண்ணையுடன் சென்னை அரவிந்த் பாலிமர் நிறுவன உரிமையாளர் கபிரியேல், மக்கள் பாதை இயக்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட தன்னார்வலர்கள்,  அரசு கலைக்கல்லூரியின் 150 தேசிய மாணவர் படை (NCC) மாணவர்கள், மகாமகம் இளைஞரணி தன்னார்வலர்கள், குடந்தை திருக்குறள் அரிமா சங்க உறுப்பினர்கள் மற்றும் பல இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் இணைந்து மரங்களை நட்டனர். 

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் திரு செ. ராமலிங்கம் இந்த முயற்சிக்கு முழுமையான ஊக்கமும் ஆதரவும் கொடுத்து வருகிறார். நிகழ்வு குறித்து ஆனந்தம் பண்ணையின் ஆனந்த் பேசுகையில், “பல்லுயிர் பெருக்குதல்,  நில வளம் காத்தல், மழைவளம் தருவித்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்டு வளர்க்கப்படும்.

இந்த அழியாக்காடு இன்னும் பல இடங்களில் பரவ வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். முதல் குறுங்காடு பற்றிய பொதுமக்களின் ஆர்வம் எங்களை அடுத்த குறுங்காடு நிறுவ பெரிதும் ஊக்குவித்தது. சென்ற முறை காட்டிலும் பல தன்னார்வலர்கள், இயக்கங்கள் எங்களுடன் கரம் கோர்த்திருப்பது பெரிதும் நம்பிக்கை அளிக்கிறது.   

மரங்களை நட்ட அனைத்து ஆர்வலர்களுக்கும், பொருள், நிதி உதவி அளித்த புரவலர்களுக்கும் எங்களது நன்றி” என்று தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்