Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் கொலு அமைத்து சரஸ்வதி பூஜை

அக்டோபர் 08, 2019 06:28

தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர் சுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் சமூக நல்லிணக்கத்தையும் பண்பாடுகளையும் மாணவ-மாணவியர் அறியும் விதத்தில் கொலு அமைத்து சரஸ்வதி பூஜை வழிபாடு நடந்தது. கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகே கஞ்சனூர் சுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் சமூக நல்லிணக்கத்தையும் பண்பாடுகளையும் மாணவ-மாணவியர் அறியும் விதத்தில் கொலு அமைத்து சிறப்பு பஜனை பாடல்கள் பாடி சரஸ்வதி பூஜை வழிபாடு நடந்தது.

இந்த கொலு காட்சியில் சுமார் 5 அடி உயரமுள்ள பிரமாண்ட விநாயகர் , 3 அடி உயரமுள்ள வீரத்துறவி விவேகானந்தர், கொலு படிகளில் விநாயகர், பெருமாளின் பத்து அவதாரங்களை நினைவு படுத்தும் வகையில் தசாவதார காட்சிகள்,  பல்வேறு விதமான பெருமாள் சிலைகள், சிவன் சிலைகள், கிருஷ்ணர் சிலைகளும் மருத்துவர்கள், காவலர்கள், வக்கீல்கள், ஓட்டுனர்கள், கையில் ஏர் கலப்பையுடன் விவசாயி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மனிதர்கள் உடை அணியும் பாவனை குறித்த காட்சிகளும், பாம்பு வித்தை காட்டும் மனிதர் அதனை ரசிக்கும் மக்கள் என்பதை உணர்த்தும் விதத்தில் காட்சிகளும், பல்வேறு தொழில்கள் செய்யும் மனிதர்கள் குறித்த காட்சிகளும், இந்து மத கடவுள்கள் மற்றும் கடவுள்களின் வாகனங்களும், மா பலா வாழை கொய்யா போன்ற பழ வகைகளும், புத்தர், சுவாமி விவேகானந்தர் , ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி பாரதியார் மகாத்மா காந்தி நேரு உள்ளிட்ட மஹான்களின் சிலைகளும் அடங்கிய காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 

மேலும் நாதஸ்வர மேள தாளங்களுடன் மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருக்க திருமணம் நிகழ்ச்சியை தத்ரூபமாக உணர்த்தும் விதத்தில் காட்சிகளும், உலக மக்களின் மிகவும் விருப்ப விளையாட்டான கிரிக்கெட் ஆடும் வீரர்கள் மைதானத்தில் எப்படி இருப்பார்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதை குறிக்கும் விதத்தில் கிரிக்கெட் விளையாட்டு காட்சிகளும், பள்ளியின் வளாகத்தில் பிரம்மாண்டமாக வளர்ந்து இருக்கும் புங்கை மரம் அடி பகுதியில் மான் முயல் கரடி சிங்கம் புலி குதிரை உள்ளிட்ட விலங்குகளும் தென்னை மரம் ஆல மரம் அரச மரம் வேப்ப மரம் போன்ற மரங்களுடன் வனப்பகுதியும், சிறிய பாத்திரத்தில் நீர் நிரப்பப்பட்டு அதில் நீர்வாழ் உயிரினங்கள் குறித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்த கொலு காட்சியை மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

பின்னர் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பள்ளியின் வளாகத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சரஸ்வதி படத்திற்கு சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து ஒரு காட்சியில் இருந்த சுவாமி சிலைகளுக்கும் பிரமாண்டமாக இருந்த விநாயகர், விவேகானந்தர் உள்ளிட்ட சிலைகளுக்கும் மலர்கள் தூவியும் சிறப்பு தீபாராதனை காட்டி வழிபட்டனர். என் நிகழ்ச்சியில் அகில பாரத சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்தானந்த மகராஜ் சிறப்பு பூஜைகள் செய்து  மாணவ, மாணவியரிடையே சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

தலைப்புச்செய்திகள்