Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துர்கா பூஜை கொண்டாடிய பெண் எம்.பி: இஸ்லாமிய மதகுரு கண்டனம்

அக்டோபர் 08, 2019 05:20

கொல்கத்தா: நடிகையாக இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆகியுள்ள நுஸ்ரத் ஜஹான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். மாற்று மதத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.

தாலி, குங்குமம் சகிதமாக எம்.பி பதவியேற்ற போதே நுஸ்ரத்திற்கு இஸ்லாமிய மதகுருக்கள் சிலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் கொல்கத்தாவில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் துர்கா பூஜையை, தனது கணவர் நிகிலுடன் ஆரவாரமாக கொண்டாடியுள்ளார் நுஸ்ரத் ஜகான். இது சமூக வலைத்தளங்களிலும் கவனம் பெற்றது.

நுஸ்ரத்தின் துர்கா பூஜை கொண்டாட்டம் குறித்து கொல்கத்தாவின் பிரபல இஸ்லாமிய மதகுரு Mufti Asad Qasmi கூறுகையில், இஸ்லாமியர்கள், அல்லா ஒருவரை மட்டுமே வணங்க வேண்டும் என்ற உண்மைக்கு நடுவே ஹிந்து தெய்வங்களை வணங்கி பூஜித்து வரும் நுஸ்ரத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல. அவர் செய்வது பாவம். 

தாய் மதம் விட்டு வேறு மதத்தைச் சேர்ந்தவரை அவர் திருமணம் செய்துள்ளார். அவர் தனது பெயரையும், மதத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும். முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு மதத்தை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது என்று Mufti கூறினார்.

இருப்பினும் இது தொடர்பாக நுஸ்ரத் கூறுகையில், மேற்கு வங்கத்தில் நாங்கள் அனைவரும் அனைத்து பண்டிகைகளையும் சேர்ந்தே கொண்டாடி வருகிறோம், இது போன்ற கொண்டாட்டங்களால் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மாதிரியான சர்ச்சைகள் என்னை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் நுஸ்ரத் பதிலடி கொடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்