Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரே நாளில் பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேர் தெலுங்கானாவில் பணிநீக்கம்

அக்டோபர் 07, 2019 04:51

ஐதராபாத்: தெலுங்கானாவில் அரசு பஸ் ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை முதல்வர் சந்திரசேகரராவ் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

தெலுங்கானாவில் 2வது முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ள சந்திரசேகரராவ் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அரசு பஸ் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்தார் முதல்வர். 

போக்குவரத்து கழகத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும். சம்பளத்தை உயர்த்த வழங்க வேண்டும். புதிய பணியாட்கள் நியமனம் செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் அனைவரும் பணிக்கு திரும்புமாறு சனிக்கிழமை மாலை வரை அரசு தரப்பில் இறுதி கெடு விதிக்கப்பட்டது. ஆனாலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடவில்லை.

இதனையடுத்து முதல்வர் சந்திரசேகர் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 48, 000 பேரை மொத்தமாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் நிலைமையை சமாளிக்க அரசு பஸ்களை லீசுக்கு விடுவது என்றும், 4 ஆயிரம் தனியார் பஸ்களுக்கு கூடுதல் அனுமதியும் வழங்கியுள்ளார் முதல்வர். 

தலைப்புச்செய்திகள்