Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் ஒவ்வொரு 25 கி.மீ தூரத்திற்கு சார்ஜிங் ஸ்டேஷன்: மத்திய அரசு முடிவு

அக்டோபர் 05, 2019 10:50

டெல்லி : மின்சார வாகனங்களின் பயன்பாடு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு இடத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு 

உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் கார்கள் பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டும் நிலையில் இந்தியாவிலும் மஹிந்திரா, டாடா போன்ற முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் இப்பிரிவில் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி வருகிறது. வல்லரசு நாடுகளைப் போலவே இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த ஏதுவான தளத்தை அமைத்துத் தரும் வகையில் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு சார்ஜிங் ஸ்டேஷன்களைக் கட்டமைக்க உள்ளது. 

நகர்ப்புறங்களில் 3 கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் 

இந்நிலையில் சார்ஜ் செய்வதற்கான இடங்கள் குறித்த வழிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.
அதன்படி, நகர்ப்புறங்களில் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் குறைந்தபட்சம் ஒரு சார்ஜிங் ஸ்டேஷனும், நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு இடத்தில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முதல்கட்டமாக 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களிலும், பெருநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளிலும் இத்திட்டம் அமல்படுத்தவும், இரண்டாம் கட்டமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைநகரங்களில் நடைமுறைப்படுத்தவும் எரிசக்தித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டே வழிமுறைகள் வகுக்கப்பட்ட நிலையில், பல்வேறு தரப்பில் இருந்து ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டதால் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தித்துறை தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்