Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுகாதார சீர்கேடான ரயில் நிலையங்களில் இந்தியாவிலேயே பெருங்களத்தூர் முதலிடம்

அக்டோபர் 05, 2019 07:54

சென்னை: தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள தெற்கு ரயில்வே நிர்வாகம் தவறியுள்ளது. இதனால், நாட்டின் தூய்மையான ரயில் நிலையங்கள் பட்டியலில், தெற்கு ரயில்வேயின் தமிழகத்தில் கடைசி இடங்களை பிடித்து பின்தங்கியுள்ளது.

ஸ்வஜ் ரயில் ஸ்வஜ் பாரத் 2019 ஆய்வறிக்கையில் தெற்கு ரயில்வே 12வது இடத்தை பிடித்தது. இதற்கு முந்தைய ஆண்டைவிட நடப்பாண்டு 7 இடங்கள் பின்தங்கியது தெற்கு ரயில்வே. 72 ரயில் நிலையங்கள் கொண்ட தெற்கு ரயில்வே மொத்தம் 1000 புள்ளிகளுக்கு 664 புள்ளிகள் பெற்று 12வது இடத்தில் உள்ளது. 63 ரயில் நிலையங்கள் உடைய தெற்கு சென்ட்ரல் ரயில்வே 732 புள்ளிகள் பெற்று 4வது இடத்தையும், 38 நிலையங்கள் கொண்ட தென் மேற்கு ரயில்வே 723 புள்ளிகள் பெற்று 5வது இடத்தையும் பெற்றுள்ளன.

ரயில் நிலையங்களில் தூய்மையின்மை மற்றும் சுகாதார சீர்கேடு போன்று காரணங்களால் தெற்கு ரயில்வேயின் முதல் 50 ரயில் நிலையங்கள் பட்டியலில் தமிழகம் ஒரு இடத்தையும் பிடிக்கவில்லை.

சுகாதார சீர்கேடு காணப்படும் ரயில் நிலையங்கள் பட்டியலில் பெருங்களத்தூர் 611, கூடுவாஞ்சேரி 609, சிங்க பெருமாள்கோவில் 608, ஒட்டப்பள்ளம் 607, ஆலப்புழா 576வது இடங்களை பெற்றுள்ளன. இதில், எழும்பூர் 149வது இடத்துக்கும், தாம்பரம் 321வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளன.

புறநகருக்கான தூய்மை பட்டியலில் சென்னை கடற்கரை 103வது இடத்தையும், பழவந்தாங்கல் 104வது இடத்தையும், வேளச்சேரி 105வது இடத்தையும், கிண்டி 106வது இடத்தையும் பிடித்துள்ளன.

சுகாதாரமற்ற ரயில் நிலையங்கள்:  
1. பெருங்களத்தூர் (தமிழ்நாடு)
2. கிண்டி (தமிழ்நாடு)
3. டெல்லி சதார் பஜார்
4. வேளச்சேரி (தமிழ்நாடு)
5. கூடுவாஞ்சேரி (தமிழ்நாடு)
6. சிங்கப்பெருமாள் கோவில் (தமிழ்நாடு)
7. ஒட்டப்பள்ளம் (கேரளா)
8. பழவந்தாங்கல் (தமிழ்நாடு)
9. அராரியா கோர்ட் (பீகார்)
10. குர்ஜா (உத்தர பிரதேசம்)

ரயில் நிலையங்கள் தூய்மை பற்றி வெறும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மட்டுமே நடப்பதாகவும், அதற்கு நிதி ஒதுக்கி தூய்மையாக வைத்துக் கொள்வதில் தெற்கு ரயில்வே நிர்வாகம் தவறிவிட்டது என்பதும் பயணிகளின் குற்றச்சாட்டாகும்.

தலைப்புச்செய்திகள்