Friday, 7th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வைரலாகி வரும் காவல்துறை அதிகாரி லஞ்சம் பெற்ற காட்சி

அக்டோபர் 04, 2019 03:24

திருப்பூர்: பிரேத பரிசோதனை செய்திட காவல்துறை அதிகாரி லஞ்சம் பெற்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

திருப்பூரில் வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விடியோ ஒன்று பகிரப்பட்டது. அதில் திருப்பூர் மாநகர காவல் துறையில் பணி செய்யும் தலைமைக் காவலர் ஒருவர் பிரேத பரிசோதனைக்கு முன், காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் வழக்கமான நடவடிக்கைகளை விரைந்து முடித்துக் கொடுக்க பொதுமக்களிடம் பணம் வாங்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

வீடியோவில் இடம் பெற்றுள்ளவர் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ள சுரேஷ் என்பது தெரிந்தது. அவர் கடந்த டிசம்பர் மாதம் அனுப்பர்பாளையத்தில் இருந்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில்.பிரேத பரிசோதனை விரைவாக செய்திட காவல்துறையை சேர்ந்த தலைமைக்காவலரே லஞ்சம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்