Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செல்போனில் வாட்ஸ் அப் இனி இயங்காது: வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி

அக்டோபர் 01, 2019 05:48

வாட்ஸ் அப் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இதில் மக்களுக்கு பொழுதுபோக்கவும் , சாட்டிங் பண்ணவும், செய்திகளை பகிர்ந்து கொள்ளவும் எனப் பல பயன்கள் உள்ளது. அதனால் வாடிக்கையாளரின் முக்கியமான ஊடகமாக வாட்ஸ் அப் மாறிவிட்டது.

இந்நிலையில் வருகின்ற 2020 ஆண்டு பிப்ரவரி முதல் குறிப்பிட்ட செல்போன்களில் வாட்ஸ் அப் இயங்காது என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
அதாவது, புதிய பதிப்பிற்கு அப்டேட் செய்யப்படாத ஐபோன் மற்றும் ஆண்டிராய்ட் பயனாளர்களின் போன்களில் எல்லாம் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் இயங்காது எனக் கூறப்பட்டுள்ளது.
 
இதில், ஐபோன்களில் ,  ஆண்டிராய்ட்ல் 2.3.7 இயங்குதளத்தில் இயங்கும் போன்கள், மற்றும் இஅபோன் ios 8 இயங்குதளத்தில் இயங்கிவருகின்ர வாட்ஸ் அப் ஆகியவற்றில் வரும் பிப்ரவரியிலிருந்து வாட்ஸ் அப் இயங்காது எனவும் அதனால்   ஐஓஎஸ் (ios) இயங்குதளம் உள்ள செல்போன்களைப் பயன்படுத்தி வாட்ஸ் அப் சேவயைப் பயன்படுத்திக் கொள்ளும்படு வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தலைப்புச்செய்திகள்