Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம்

பிப்ரவரி 26, 2019 07:03

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஓன்றியம் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் முத்தரசநல்லூரில் நடைபெற்றது. இந்த பொதுகூட்டம் ப.குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, கே.கே.பாலசுப்ரமணியன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் எம்.ஜி.பாண்டியன், மற்றும் ஓன்றிய கழக நிர்வாகிகள் கர்ணன், விஜயாகந்தசாமி, ராஜ்குமார் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வளர்மதி (பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, கழக அமைப்புச் செயலாளர்),  அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் (சுற்றுலாத்துறை, மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவர்) கலந்து கொண்டு சிரப்புரையாற்றினர்.  

அமைச்சர் வளர்மதி பேசுகையில்: ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் முதலமைச்சர் அம்மா சுமார் 4000-ம் கோடிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளார்கள். இந்த நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.  

பொங்களுக்கு ரூபாய் 1000-ம் வழங்கும் திட்டத்துக்கு எதிராக திமுக பிரமுகர் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் அந்த வழக்கில் வெற்றிபெற்று தொடர்ந்து அந்த திட்டம் செயல்படுத்தி வருகிறோம். இன்னும் 100-ஆண்டுகள் தமிழகத்தில் நமது கட்சி ஆட்சி செய்யும் என்று அம்மா கூறியுள்ளார். தற்போது அமைத்துள்ள நாடாளுமன்ற கூட்டணி வெற்றிகூட்டணியாகும்.  

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில்: எம்.ஜி.ஆர் கட்சியையும் ஆட்சியையும் காப்பற்ற வேண்டிய பொறுப்பை ஜெயலலிதாவின் ஓப்படைத்து சென்றார். அதை நல்லபடியாக செய்து காட்டி சென்றுவர் நமது அம்மா அவர்கள். தன்னுடைய சுக துக்கங்களை மறந்து ஓரு தவ வாழ்க்கையை வாழந்து காட்டி சென்றுள்ளார்கள். எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்தாளும் அதையெல்லாம் தாண்டி 32-வருடம் கழித்து மீண்டு தொடர் ஆட்சியை அமைத்து தந்தவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள்.  

தனது வாழ்நாள் முழுவதும் கழக இயக்கத்திற்காகவே வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா அவர்கள் என்று கூறினார். பின்பு நலதிட்ட உதவிகளை அமைச்சர்கள் மற்றும் ப.குமார் ஆகியோர் வழங்கினர்.

தலைப்புச்செய்திகள்