Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குற்ற சம்பவங்களை தடுக்க அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

செப்டம்பர் 24, 2019 03:24

ஆவடி: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகரம் சார்பில் முப்பெரும் விழா ஏழை எளிய மக்களுக்கு நல திட்டம் வழங்கும் விழா ஆவடியில் நடைபெற்றது. அதில் மேடையில் பேசிய பிரேமலதா பேனர் விழுந்ததை ஒரு விஷயமாக எடுத்து கொண்டு அதை அரசியல் செய்ய பார்த்தவர் தான் எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின். ஆனால் இதுவே ஒரு பொது நிகழ்ச்சியோ கோவில் நிகழ்ச்சியோ வைத்திருந்து விழுந்திருந்தால் அதை வைத்து அவர் அரசியல் செய்திருக்க மாட்டார். 

ஏனெனென்றால் இது எதார்த்தமாக நடந்த விஷயம் தான் இன்று தமிழகத்தில் பேனர் இல்லாத நிகழ்ச்சி உண்டா. பெண்கள் பாதுகாப்பாக பற்றிபேசிய பிரேமலதா பெண்கள் எங்கு சென்றாலும் வந்தாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ஏனென்றால் இன்றைக்கு செயின் பறிப்பு கொலை ஆகியவை அசாதாரணமாக நடைபெறுகிறது. இன்றைய காலம் மிகவும் மோசமானதாக ஒன்றாக உள்ளது ஏனென்றால் செயின் பறிப்பு கொலை ஆகியவை சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.

திமுக வை பற்றிய பிரேமலதா விமர்சனம் தமிழில் பெயர் வைப்பது என்று சொல்வதும் ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்வதும், அதேபோல் சொல்வதை செய்யாமல் வாபஸ் வாங்குவதும் இது யார் செய்வார் என்றால் ஒரே கட்சி திமுக தான். கவர்னரை சந்திக்க செல்லும்போது வீரவசனம் பேசிவிட்டு சென்ற ஸ்டாலின் கவர்னரை சந்தித்த பிறகு ஸ்டாலின் முகத்தில் ஒரு மரணபயம் தெரிந்தது.

அதை ஒட்டுமொத்த தமிழக மக்களும் பார்த்திருப்பார்கள். ஒரு கட்சி ஒரு கொள்கையை முழுமையாக எடுத்து கொண்டால் அந்த கொள்கையில் ஒருமனதாக இருக்க வேண்டும் எனவும் கவர்னர் அழைத்து பேசியவுடன் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து வாபஸ் வாங்கியது திமுகதான் என்பதை மக்களாகிய நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இல்லாத நிலை வர வேண்டும் மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை அதேபோல் அனைவருக்கும் நல்ல மருத்துவ வசதி இவை அனைத்தும் நமக்கு தேவை இதையெல்லாம் எந்த ஆட்சி தருகிறது. அந்த ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும் என்று கூறினார். 

பின்னர் தொடர்ந்து பேசிய அவர், கேப்டனுக்கும் எனக்கும் எப்படி திருமணம் நடைபெற்றதோ அதே போல எங்கள் மகன் திருமணம் சம்பிரதாயத்தின் படி நடைபெறும் எனவும் எங்கள் மகன் விஜய பிரபாகரனுக்கு பெரியோர்கள் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடைபெறும் என கூறினார். 

பின்னர் நிகழ்ச்சி முடிவில் தேமுதிகவின் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஊனமுற்றோருக்கு முன்று சக்கர மிதிவண்டி, பெண்களுக்கு தையல் இயந்திரம், ஆண்கள் பெண்களுக்கு இலவச வேட்டி சேலை, மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை சுமார் 101 தாய்மார்களுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் பல இடங்களில் கொலை சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. இதை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். இதற்கு ஆளும் கட்சி மட்டும் அல்லாமல் நீதி அரசர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் இன்று சர்வசாதாரணமாக கொலைகள் நடக்கிறது. அது எப்படி நடக்கிறது. ஜெயிலில் இருந்து பிணையில் வெளியே வரும் கைதிகள் பழிக்குப் பழி தீர்க்கும் எண்ணங்களுடன் வருவதால் கொலை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். ஜாமீன் பெற்று பிணையில் வெளியே வரும் கைதிகளை அனுப்பலாமா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும்.

நீதியரசர்கள் சரியாக சிந்தித்து இந்த முடிவை எடுக்க வேண்டும். பெரிய குற்றங்களை செய்தவர்கள் தண்டனைக்குறியவர்களாக இருந்தால் அவர்களை வெளியே அனுப்பக்கூடாது. அதுபோன்று வெளியேறும் கைதிகள் மூலமாக மற்றுமொரு கொலைகள் நடக்கா வண்ணம் கண்காணிக்கப்பட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார். 

தலைப்புச்செய்திகள்