Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வி.சி.க. சார்பில் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

செப்டம்பர் 24, 2019 12:42

கும்பகோணம்: கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி பழைய மீன் மார்க்கெட் அருகில் மாவட்ட செயலாளர் தமிழனின் தலைமையில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் விடுதலை செல்வன் நகர செயலாளர் கலையரசன் விவசாயி அணி பொருளாளர் பாலகுரு மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தொல் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு ஐந்து நபர்களுக்கு சில்வர் குடம் 25 பெண்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்