Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ம.க. உழவர் பேரியக்கம் சார்பில் பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

செப்டம்பர் 20, 2019 08:10

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி உழவர் பேரியக்கம் சார்பில் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் ஆலயமணி தலைமையில் வன்னியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மற்றும் சமீபத்தில் கொள்ளிடத்தில் படகில் சென்ற நான்கு பேருக்கும் இரங்கல்  தெரிவிக்கப்பட்டது.

படகில் சென்ற இறந்த நான்கு நபர்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் சமீபத்தில் பெய்த கன மழையால் கொள்ளிடம் ஆற்றில் பல்லாயிரம்கணக்கான கனஅடி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. ஆனால் கடைமடை பகுதிக்கு உள் கிராமங்களுக்கு இந்த நீர் சென்றடைவதில்லை. 

ஆகவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாசன வடிகால் வாய்க்களுக்கும் குளம் குட்டைகளையும் தூர்வாரி நீர்நிலைகயும் நீர்வள ஆதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். பந்தநல்லூர் பகுதியில் தொடர் மின்வெட்டால் விவசாயம் பாதிக்கப் படுவதால் ஒரு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.

பாபநாசத்தில்  வேளாண்மை துறை ஏ டி அலுவலகம் விவசாயிகளுக்கு எந்த விதமான விதை நெல்லும் கிடைப்பதில்லை குறுகிய காலத்தில் விதை நெல் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறையில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே மற்றும் திருநீலகுடி ஆகிய பகுதிகளில் பாலம் பணிகள் நிறைவடையவில்லை.

இதனால் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் நோயாளிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆகவே பால பணிகளை நெடுஞ்சாலை துறையும் மற்றும் பொதுப்பணித் துறையும் துரிந்து பணிகளை முடிக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் மாற்றுப் பாதையை சீர் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டன. 

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்  மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்