Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வழக்கறிஞர் சங்கம் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து கண்டன ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 20, 2019 06:32

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் புதிதாக நீதிபதிகள் தேர்வு செய்யும் முறை குறித்தும் தற்போது வெளிவந்துள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கையின் படி நீதிபதி தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியதில்லை, என்றும் நீதிபதிகள் தேர்வு பெற்று பின் பயிற்சி காலத்திற்குள் தமிழைக் கற்றுக் கொள்ளலாம் என்பதே உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

புதிதாக தேர்வு செய்யப்படும் நீதிபதிகள் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்க வேண்டுமென்ற விதியை உருவாக்க வேண்டுமென்றும், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளில் காயமடைந்த வழக்காடிகளுக்கு இழப்பீட்டு தொகையினை 01.10.2019லிருந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வைப்பீடு செய்து அந்த தொகையிலிருந்து ஒரு சிறு தொகையினை இந்த வைப்பீடு தொகைக்கான மாத வட்டியையும் வழக்காடிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பிரகாஷ் அவர்கள் பிறப்பித்த உத்தரவினை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு செய்து நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர் சங்கத் தலைவர் லோகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்க செயலாளர் தரணிதரன் முன்னால் சங்கத் தலைவர் சங்கர் ராஜசேகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.

தலைப்புச்செய்திகள்