Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கனமழை காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர்

செப்டம்பர் 19, 2019 11:31

திருவள்ளூர்: ஆவடி அடுத்த திருநின்றவூர் பெரியார் நகர் பகுதியில் நேற்று பெய்த கனமழை காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் தவிப்பு.  

நேற்று திடீர் மழையால் திருநின்றவூர் உள்ள சுதேசி நகர் திருவேங்கட நகர் முத்தமிழ் நகர் போன்ற இடங்களில் மழைநீர் ஏரிக்கு செல்ல முடியாமல் பகுதி வசிக்கும் பொது மக்கள் வீட்டிற்கு உள்ள சென்றதால் கடும் அவதியுற்றனர். மேலும் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஈசா ஏரியை சுற்றி பொதுப்பணித்துறை மூலமாக கரை அமைத்திருந்தார்கள். இந்த கரைக்கு ஒரு கோடியே 30 லட்சம் செலவு செய்யப்பட்டது. ஆனால் இப்பகுதியில் மழை நீர் எந்த ஒரு வழியும் செய்யமால் கரை அமைத்திருந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் ஏற்கனேவே  மழை நீர் செல்ல வழி வகை செய்யுங்கள் என் பல முறை பொது பணி துறையிடம் பல மனுக்கள் கொடுக்கப்பட்டது. 

இதை பொது பணித்துறை கண்டுகொள்ளவேயில்லை. இதனால் தற்போது மழை நீர் ஏரிக்கு செல்ல முடியதாதற்கு  பொதுப்பணி துறை காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.  இந்த கரையின் எந்த ஒரு கால்வாயும், மதகு ஒரு அமைக்கவில்லை. கோடை காலத்தில் இந்த எரியை தூர் வராதது  இதுவும் ஒரு காரணம் என் அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மழைநீரால் தற்போது இப்பகுதி மக்களுக்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் போன்ற பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இப்பகுதியில் தற்போது  நோய் பரவும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. 

எனவே அரசு அதிகாரிகள் இந்த இந்த மழை நீரை விரைவாக ஏரிக்கு அனுப்ப  வழி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இப்போது மிகப்பெரிய கோரிக்கை என்னவென்றால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் வந்து மழைநீர் ஏரிக்கு செல்ல வழிவகை செய்யுமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்