Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சியின் நூதன நடவடிக்கை

செப்டம்பர் 19, 2019 06:54

கோவை: தமிழகத்தின் வர்த்தக நகரமான கோவையில், பொது இடங்களில் குப்பைகள் குவிவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த நிலையில், எதுவும் பலன் அளிக்கவில்லை. இதன் காரணமாக, தற்போது நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, பொதுமக்கள் குப்பை கொட்டும் இடத்தில் சாணம் தெளித்து, பூ கோலமிட்டு, நகரை அழகுப்படுத்தி வருகின்றனர். 

கோவை மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மாநகராட்சி ஊழியர்களின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். மேலும், கோவையை தூய்மைப்படுத்தும் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் பொதுமக்கள் உறுதி அளித்துள்ளனர். 

பொதுமக்களின் ஒத்துழைப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ள கோவை மாநகராட்சி அதிகாரிகள், குப்பைகளை தரம் பிரித்து போடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி, மக்கும் குப்பை, மக்காத குப்பை என எழுதப்பட்ட குப்பைத் தொட்டிகளை, பொது இடங்களில் வைத்துள்ளனர். 

கோவையை தூய்மைப்படுத்தும் மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். எனினும், அனைத்து பகுதியில் வசிக்கும் மக்களும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க முன்வந்தால் மட்டுமே, கோவையை தூய்மையான நகரமாக மாற்ற முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.   

தலைப்புச்செய்திகள்