Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதால் ரயில் கட்டணங்கள் உயரும்: கண்ணையா

செப்டம்பர் 18, 2019 01:20

சென்னை: மத்திய அரசு ரயில்வேயில் 100 நாள் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி 90 ஆயிரம் கோடி மதிப்பிலான உற்பத்தி யூனிட்டுகள்,ரயில் தடங்கள், பராமரிப்பு பணிகள்,சரக்கு தொடர் வண்டிகள் மற்றும் பயணிகள் தொடர் வண்டிகள் தனியாருக்கு தாரை வார்க்க இலக்கு நிர்ணயித்து, இந்த திட்டத்தை செயல்படுத்த துவங்கி இருக்கிறது. 

இதனை கண்டித்து தென்னக ரயில்வே தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கண்ணையா தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் அண்ணனுரில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய  கண்ணையா, லாபத்தில் இயங்க கூடிய இரண்டு ரயில்களை மத்திய அரசு தனியாரிடம் ஒப்படைக்க உள்ளார்கள்.

தேஜா எக்ஸ்பிரஸ் மெட்ராசிலிருந்து மதுரை செல்லும் வண்டியையும்,கோயம்புத்தூர் செல்கின்ற லாபத்தில் இயங்கக்கூடிய இரண்டு வண்டியையும் தரப் போகிறார்கள். உதாரணமாக சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்ல அதனுடைய விலை 315 ரூபாய் ஆகிறது.ஆனால் தனியாருக்கு வந்துவிட்டால் குறைந்தபட்சம் 815 ரூபாய் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

அதேபோல் சென்னையிலிருந்து மதுரை 835 ரூபாய் சீனியர் சிட்டிசன் 530, தாய்மார்களுக்கு 430, என 2,000 ரூபாயாக நிர்ணயிக்க போகிறார்கள். வருகிற அக்டோபரில் தேஜா எக்பிரஸ் என்ற லக்னோ டெல்லி மற்றும் அகமதாபாத்திலிருந்து பாம்பே செல்கின்ற இரண்டு வண்டியையும் தனியாருக்கு விற்று விட்டார்கள்.

அங்கு குழந்தையாக இருந்தாலும் அவர்களுக்கு முழு கட்டணம் தரப்பட வேண்டும்.15 லட்சம் ரூபாய் இன்ஷூரன்ஸ் தரப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். இன்ஷூரன்ஸ் என்பது விபத்து ஏற்பட்டு அதில் இறந்தால் இன்ஷூரன்ஸ் தரப்பட வேண்டும் என்று அதில் இருக்கிறது. 

ஏற்கனவே இந்த மத்திய அரசு ரயில் விபத்து ஏற்பட்டு அதில் இறந்தால் 20 லட்சம் ரூபாய் தருவேன் என ஏற்கனவே அமுலில் இருக்கும் பொழுது இன்ஷ்யூரன்ஸ் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மக்களாகிய நீங்கள் மிகப்பெரிய பாதிப்பை அடையப் போகிறீர்கள்.ஆகையால் நாம் எல்லோரும் மத்திய அரசுக்கு ஒரு கண்டனக் குரலை கேட்க வேண்டும் என்றார்.

தலைப்புச்செய்திகள்