Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மீனாட்சி அம்மன் வெங்கடாஜலபதி ருத்ர மகா காளியம்மன் ஆகிய மூன்று திருக்கோவில் மகாகும்பாபிஷேகம்

செப்டம்பர் 16, 2019 01:02

கும்பகோணத்தில் அரியதிடலில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத வெங்கடாஜலபதி திருக்கோவில் மற்றும் ஸ்ரீ ருத்ரம் மகா காளியம்மன் ஆகிய மூன்று திருக்கோவில் உள்ளது. 

இதில் கடந்த 13 ஆம் தேதி அன்று விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கி கடந்த 14ஆம் தேதி யானை குதிரை ஒட்டகம்துடன் மேளதாளம்க்குடன் அரசலாற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து நான்கு நான்கு கால யாகசாலை பூஜையுடன் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 

திருமணமாகாத பக்தர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வந்து வழிபட்டால் திருமண தடைகள் நீங்கி நினைத்த மாதத்திலே திருமணம் நடைபெறும். திருப்பதி செல்ல முடியாதவர்கள் இக்கோயிலில் உள்ள வெங்கடாஜலபதி பத்மாவதி தாயாரே ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

வயிற்றில் வலி ஏற்பட்டால் சாப்பிட முடியாதவர்கள் ஜீரணசக்தி இல்லாதவர்கள் போன்றவர்கள் இக் கோயிலில் அன்னதானம் செய்தால் நிரந்தரத் தீர்வு ஏற்படும். கண் எரிச்சல், கண்ணில் நீர்கசிவு, கோபத்தை கட்டுப்படுத்தும் தன்மை, மன நிம்மதியின்மை போன்ற வியாதிகளுக்கு இக்கோயில் உள்ள ருத்திரமகாகாளியம்மன் வழிபட்டால் விமோசனம் கிடைக்கும்.

திருமணமாகாத ஆண்கள், பெண்கள் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி உடனே திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம். இத்திருக் கோவிலில் மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

சிதிலமடைந்த கோவிலை கிராம மக்களும் மகளிர் மற்றும் அறக்கட்டளை பணியாளர்கள் திருப்பணி செய்து மகா கும்பாபிஷேகம் நடத்தினர்கள்.

தலைப்புச்செய்திகள்