Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அரசு இந்தி திணிப்பதை தவிர்க்க வேண்டும்: ஜவாஹிருல்லா

செப்டம்பர் 15, 2019 09:46

கும்பகோணம்: கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரி யில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  

தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்காமல் மத்திய அரசின் கொள்கைகளை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அதிமுக அரசு, அக்கட்சியின் அதிமுக கொடியில் அண்ணாவின் படத்தை அகற்றிவிட்டு மோடியின் படத்தை போட்டுக் கொள்ளலாம்.

மேலும் தமிழக அரசு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற கொள்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

அதேபோல் மத்திய அரசு இந்தியை தெளிப்பது நாட்டின் பன்முக தன்மையை கெடுத்துவிடும் மத்திய அரசு இந்தி திணிப்பதை தவிர்க்க வேண்டும். 

அவ்வாறு செய்யவில்லை எனில் மக்களோடு சேர்ந்து மனிதநேய மக்கள் கட்சி இந்தியை விரட்ட போராட்டம் நடத்தும் என அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்