Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முருகன் இட்லி கடையின் உரிமம் ரத்து: உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

செப்டம்பர் 10, 2019 12:52

திருவள்ளூர்: சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்ட முருகன் இட்லி கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் சென்னை பாரிமுனையில் உள்ள முருகன் இட்லி கடையில் உணவில் புழு இருப்பதாக பிரபாகரன் என்பவர் வாட்ஸ்அப் செயலி மூலம் ஒரு பிகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் உணவு தயாரிக்கும் கூடத்தில் கடந்த ஏழாம் தேதி ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தயார் செய்யப்பட்ட உணவுகள் சமைப்பதற்கு முன் இருக்கும் உணவுப் பொருட்களை ஆய்வு செய்திருக்கின்றனர்.

ஆனால் அதில் சரியான முறையில் பராமரிப்பு  பிடிக்காமல் இருப்பது தெரியவந்தது அத்துடன் பூச்சிக் கட்டுப்பாடு முறை சரியாக பின்பற்றவில்லை எனவும், இது மட்டுமல்லாது உணவு தயாரிப்பவர்கள் தகுந்த மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பிக்கவில்லை. 

இட்லி கடைக்கு லைசென்ஸ் வழங்கிய போதும் அதனை அதற்கான இடத்தில் வைக்கவில்லை என்றும் இப்படி பல்வேறான காரணங்களுக்காக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முருகன் இட்லி கடை உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்