Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசியலுக்கு ரஜினி வந்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை: ஜி.கே. வாசன்

செப்டம்பர் 08, 2019 10:49

உடுமலை: த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் உடுமலையில் நிருபர்களிடம் கூறியதாவது- சந்திராயன் -2 விண்கலம் தோல்வியடைய வில்லை. விஞ்ஞானிகளின் கடினமான உழைப்பு பாராட்டுக்குரியது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த முறை உரிய பாதுகாப்பை தமிழக அரசு செய்யாத காரணத்தால் முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. ஆகையால் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக் கையான ஆனைமலை- நல்லாறு திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். மக்காச் சோள பயிர்களில் படைபுழு தாக்குதல் காரணமாக விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டு இருப்பதால் உரிய நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். இந்தியாவில் ஏற்பட்டு உள்ள பொருளாதார மந்த நிலையை சரிகட்டும் முயற்சியில் மத்திய ரிசர்வ் வங்கி மூலம் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

வருகிற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. முதல் - அமைச்சர் வெளிநாடு பயணம் வெற்றி பெறும். இது குறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்து வருவது வருத்தத்துக்கு உரியது. தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வர எதிர் கட்சிகளும் ஓத்துழைக்க வேண்டும். நாகரிகமற்ற வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்