Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கார்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருக்குறள் அரிமா சங்கம் இணைந்து ஆசிரியர் தினத்தை கொண்டாடியது

செப்டம்பர் 05, 2019 01:43

கும்பகோணம்: கும்பகோணம் கார்த்திக் வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர். டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரின்  பிறந்த நாள் வருடந்தோறும் செப்டம்பர்  5ம் நாள் தமிழகம் முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடபடுகிறது. 

அதனை கொண்டாடும் விதமாக இன்று  திருக்குறள் அரிமா சங்கம் ,கார்த்தி வித்யாலயா கல்வி நிறுவனங்கள் இணைந்து ஆசிரியர் தின விழா,  கல்வி மாவட்ட அளவிலான சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவினை சிறப்பாக கொண்டாடினார்கள். 

ஒரு குழந்தையை நல்வழிபடுத்துவதில். மாதா பிதாவை விட குருவிற்கே அதிகம் பங்கு உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் வகையில் இவ்விழா அமைந்து இருந்தது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தங்கள் தனி திறமைகளை ஆடல் மூலமாகவும்  நாடகம் மூலமாகவும் வெளிப்படுத்தினார். பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சிறந்த ஆசிரியர்க்கான விருதானது அவர்களின் சிறந்த பண்புகளின் அடிப்படையில் கெளரவபடுத்தும் விதத்தில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரிய ஆசிரியைகள் , மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்