Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆசிரியர் தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து

செப்டம்பர் 05, 2019 09:12

புது டெல்லி: இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆசிரியரான அவரது பிறந்தநாளை நண்பர்களும் மாணவர்களும்  கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். 

இதனையடுத்து செப்டம்பர் 5(இன்று) ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஆசிரியர் தினமான இன்று, என் அஞ்சலியை டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்களுக்கு செலுத்துகிறேன் மற்றும் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

கனவையும், அறிவினையும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பெற அவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்கின்றனர். இதனை இளைய சமூகத்தின் எண்ணத்தில் ஆசிரியர்கள் உட்செலுத்துகின்றனர். இதன் மூலம் இந்த நாட்டை கட்டமைக்க அவர்கள் பெரிதும் உதவுகின்றனர். 

இதையடுத்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, ‘அனைவருக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். தனித்துவமிக்க ஆசிரியர், சிறந்த வழிகாட்டியாக திகழும் டாக்டர்.ராதா கிருஷ்ணன் பிறந்த இந்நாளில் இந்தியா தன் மரியாதையை அவருக்கு செலுத்துகிறது.

தலைப்புச்செய்திகள்