Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை: மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞரை காரில் கடத்திய கும்பல் கைது

செப்டம்பர் 01, 2019 11:26

சென்னை: சென்னையில் பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞரை காரில் கடத்திய மூவர் கும்பல் அவரிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாயை பறித்து மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேகே நகரை சேர்ந்த ஸ்ரீகுமார் தாம்பரத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் வடபழனி செல்வதற்காக ரேபிடோ செயலி மூலம் இருசக்கர வாகனத்தை புக் செய்துள்ளார். ஆனால் மழை அதிகமாக பெய்ததால் இருசக்கர வாகனத்திற்கு பதிலாக கார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகுமார் காரில் ஏறியவுடன் வடபழனிக்கு செல்ல வேண்டிய செல்லாமல் வேறு திசையில் செல்ல தொடங்கியுள்ளது. இதுகுறித்து கேட்டபோது ஸ்ரீகுமாரை கடுமையாக தாக்கிய அக்கும்பல், அவர் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை பறித்துள்ளது. 

மேலும் அவரை செல்போனில் நிர்வாண படம் எடுத்த அக்கும்பல், 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது. இதுதொடர்பான கே.கே.நகர் காவல்நிலையத்தில் ஸ்ரீகுமார் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஓட்டுனர் சரவணகுமார், திமுக நிர்வாகி விருகம்பாக்கம் தமிழ்ச்செல்வன், ஆட்டோ ஓட்டுனர் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

தலைப்புச்செய்திகள்