Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதலமைச்சர் சுற்றுப் பயணம் செய்தாலும் நடக்க வேண்டிய பணிகள் சிறப்பாக நடக்கும்: அமைச்சர் காமராஜ்

ஆகஸ்டு 30, 2019 03:56

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவூர் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. 

இதில் உணவு மற்றும் நுகர் பொருள் துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்தன் மற்றம் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் காமராஜ், பொதுமக்கள் அமர்ந்திருந்த இடத்திற்கே நேரில் சென்று மனுக்களை பெற்றுக் கொண்டார்.

 முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டு மனை பட்டா கேட்ட பலருக்கு ஒரு மணி நேரத்தில் அவர்களது மனுக்களை பரிலீசித்து உடனடியாக ஓய்வூதியம், இலவச மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காமராஜ் மேடையிலேயே வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், எந்த பகுதிக்கு தண்ணீர் தேவை என்பது பொதுப்பணித்துறைக்கு நன்றாக தெரியும் என்றும், விவசாயிகள் கோரிக்கை வைத்தால் அந்த பகுதிக்கு தண்ணீர் விநியோகம் குறித்து பரிசிலீத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 மேலும், டெல்டா பகுதிகளுக்கு நேரடி நெல் விதைப்பு ஏற்றதல்ல என்ற விவசாயிகளின் கருத்து குறித்து கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ், டெல்டா பகுதிகளுக்கு நேரடி நெல் விதைப்பு தான் உகந்தது என்றும், இதன் மூலம் களை நாற்று பறிப்பு கிடையாது என்றும், கூடுதல் மகசூல் கிடைப்பதால் தான் முதலமைச்சர் நேரடி நெல் விதைப்பை பரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் எங்கு சுற்றுப் பயணம் செய்தாலும், எந்தெந்த நேரத்தில் எந்தெந்த பணிகள் நடைபெற வேண்டுமோ அந்த பணிகள் நடைபெறும் எனவும் அமைச்சர் காமராஜ தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்