Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிக்கலான பல அறுவை சிகிச்சைகளை வெற்றிக்கரமாக முடித்த தனியார் மருத்துவமனை

ஆகஸ்டு 29, 2019 11:18

காஞ்சிபுரம்: சென்னை அடுத்த குரோமேட்டை தனியார் மருத்துவமனையில் காஞ்சிபுரம் அருகே வாகன விபத்தில் வாலாஜாபாத்தை சேர்ந்த பொன்னியம்மாள் (வயது 20) 3-ம் ஆண்டு பி.எஸ்.ஸி.படிக்கும் மாணவியின் வலது கை நசுங்கியதால் கடுமையான காயம் ஏற்பட்டது. அத்துடன் ஆர நரம்பு காயத்தின் காரணமாக, மணிக்கட்டு தொங்குகின்ற பாதிப்பும் ஏற்பட்டது.

சென்னை அடுத்த குரோமேட்டை தனியார் மருத்துவமனையின் எலும்பு முறிவியல் அறுவைசிகிச்சைத் துறையின் இயக்குனர் டாக்டர் தர்மராஜன், எலும்பு முறிவியல் துறையின் முதுநிலை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் மிதுன், மற்றும் பார்வதி மருத்துவமனையின் முதுநிலை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையின் மருத்துவர் டாக்டர் அருள் ஆகியோர் தலைமையில் செயல்பட்ட அறுவைசிகிச்சை நிபுணர்களின் குழு, சவால்கள் நிறைந்த இந்த சிக்கலான அறுவைசிகிச்சை செயல்முறைகளை மேற்கொண்டது. 

மேற்புற கை வெட்டப்படுவதை வெற்றிகரமாக தவிர்த்திருப்பதோடு, நோயாளியின் கை இயக்கத்திறனை அவர் மீண்டும் பெறுவதற்கு இந்த அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.  பொன்னியம்மாள் தனது பாதிப்பிலிருந்து மீண்டது குறித்து கூறியது: 

பிறமருத்துவமனையில் எனது கையை வெட்டி எடுத்தாக வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்ட நிலையில், பார்வதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், எனது கை கடுமையாக நசுங்கியிருந்தபோது, சிறப்பான சிகிச்சையினை எனக்கு வழங்கியிருக்கின்றனர். இதன்மூலம் எனது மேற்புற கையின் செயல்பாட்டை என்னால் திரும்ப பெறமுடிந்திருக்கிறது. 

எனது கையால் என்னால் இப்போது அசைக்க முடிகிறது. கூடியவிரைவில் என்னுடைய இயல்பான பணிகளை, எனது காயமடைந்த வலது கையைக் கொண்டு செய்யமுடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.

- தாம்பரம் கண்ணன்

தலைப்புச்செய்திகள்