Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தில் இன்று மினி மாராத்தான் ஓட்டம்

ஆகஸ்டு 29, 2019 11:04

திருவள்ளூர்: இன்று  தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தில் பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவ மாணவியர் கலந்து கொண்ட மினி மாராத்தான் பந்தையம் நடைபெற்றது.

ஆவடி அஜைய் விளையாட்டு அரங்கத்திலிருந்து வேல் டெக் பல்கலைகழகம் வரை நடத்தப்பட்ட இப்போட்டியை ஆவடி வேல்டெக் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் VVS குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் பல்கலைகழக பதிவாளர் பிரேமா, இயக்குநர் டாக்டர்.E.கண்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

சுமார் 250 மாணவ மாணவிகள் கலந்துக்கொண்ட இப்போட்டியில் 1 ஒன்று முதல் 10  வெற்றிபெற்ற  மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது  மற்ற போட்டியில் கலந்து  கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது. 

முதல் பரிசு கும்பகோணம் அன்னை பொறியியல் கல்லூரி மாணவர் முகேஷ் , இரண்டாம் பரிசு  பொன்னேரி LNG அரசு கல்லூரி மாணவர் கவியரசன்  மூன்றாம் பரிசு வேல் டெக் பல்கலைகழக மாணவர் அபுபப் சித்திக் பெற்றனர். போட்டிகள் நிறைவடைந்த பிறகு ஒவ்வொரு மாணவ. மாணவிகளும் விளையாட்டு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

- ஆவடி ராஜன்

தலைப்புச்செய்திகள்