Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கிளியனூர், கோட்டகுப்பம் காவல் நிலையங்கள் சார்பாக நூலகங்கள் திறப்பு

ஆகஸ்டு 28, 2019 04:06

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கிளியனூர் மற்றும் கோட்டகுப்பம் காவல் நிலையங்கள் சார்பாக அரசு பள்ளிகளில் நிறுவப்பட்ட நூலகங்களை மாணவர்கள் பயன்பாட்டிற்க்காக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

காவல் கண்காணிப்பாளர் பேசும்போது புத்தகங்கள் படிக்க படிக்க அறிவு வளரும். அறிவு வளர்ந்தால் பரந்த மனப்பான்மை ஏற்படும். அதன்மூலம் குற்றச்செயல்கள் குறையும் எனவும், ஒரு நூலகத்தை திறந்தால் நூறு சிறைச்சாலைகள் மூடிவிடலாம் எனவும். அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான் அதிக சதவிகிதத்தில் உயர் பதவியில் இருப்பதாகவும். நானே அரசு பள்ளியில் படித்தேன் என்று கூறியபோது மாணவர்கள் பலத்த கைதட்டல் மூலம் மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

இந்நிகழ்ச்சியில் கோட்டகுப்பம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அஜய்தங்கம் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்