Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காணொளி காட்சி மூலம் இரும்பு பாலம் திறப்பு விழா

ஆகஸ்டு 27, 2019 11:09

கடலூர்: கடலூர் மாவட்டம் கடலூர் அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். 

காலை பள்ளிக்கு வரும்பொழுதும், மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போதும்  மிகப்பெரிய அளவில்  போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் மாணவர்கள்  நிலையை கருத்தில் கொண்டு கடந்த வருடம்  டலூர் முன்னாள் எம்பி அருண்மொழி தேவன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பிலான இரும்புப் பாலம் கட்டப்பட்டு  திறப்பு விழாவும் முடிந்தது.

இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இரும்பு மேம்பாலம் கடந்து செல்லும் பொழுது இருபுறமும் மிகப்பெரிய அளவில் இடைவெளி இருப்பதால் மாணவர்களுக்கு அது பாதுகாப்பு இல்லை என தெரிகிறது.

எனவே மாணவர்கள் பாதுகாப்பு கருதி, தமிழக அரசு உடனே இதுகுறித்து தகுந்த நடவடிக்கைஎ எடுத்து இருபுறமும் கம்பி படல் வைத்து அடைத்தால், மாணவர்கள் மேலே கடந்து செல்லும் பாதுகாப்பாக இருக்கும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்