Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

ஆகஸ்டு 27, 2019 07:45

கும்பகோணம்: கும்பகோணத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கும்பகோணத்தில் அரசு மருத்துவர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் மருத்துவக்கல்லூரிகளில் ஏற்கனவே மருத்துவர்களின் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகள் காரணம் காட்டி  G.O.(4D)-2 மூலம் மருத்துவர்கள் பணியிடங்களை மேலும் குறைக்காதே,  சுகாதார கூட்டமைப்பின் தூண்களான அரசு மருத்துவர்களின் உரிமைகளை பறிக்காதீர் காலம் சார்ந்த ஊதிய உயர்வு (DACP) மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு  பணியிட கலந்தாய்வை உடனடியாக அமல்படுத்து, உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகம் முன்பு கூட்டமைப்பு தலைவர் ராஜேஷ் ராம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டு கண்டன முழக்கம் எழுப்பினார்கள். 

மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் காலை முதல் நோயாளிகள் நீண்ட நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்