Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ. 1,000 கோடி வங்கி மோசடி: முன்னாள் துணை முதல்வர் மீது எப்.ஐ.ஆர்

ஆகஸ்டு 27, 2019 04:42

மும்பை: மும்பை கூட்டுறவு வங்கியில், ரூ.1,000 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட, மஹாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வரும், சரத் பவாரின் தேசியவாத காங்., கட்சி மூத்த தலைவருமான அஜித் பவார் உட்பட, 76 பேர் மீது, எப்.ஐ.ஆர்.,எனப்படும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

மஹாராஷ்டிராவில், தேசியவாத காங்., கட்சி சார்பில், துணை முதல்வராக பதவி வகித்தவர் அஜித் பவார்., 2007 முதல், 2011 வரை, மஹாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியின் இயக்குனராக பதவி வகித்த போது, ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறி, பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கி, அதை திரும்ப வசூலிக்காமல், வங்கிக்கு ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக, 'நபார்டு' வங்கி நடத்திய தணிக்கையில், அஜித் பவார் உட்பட, 34 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளின் உயர் அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக, நபார்டு வங்கி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் அஜித் பவார் உள்ளிட்ட 76 பேர் மீது, பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில், முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, உத்தரவிட வேண்டும் என, மும்பை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அஜித் பவார் உள்ளிட்ட, 76 பேர் மீது, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர். இந்த வழக்கால் அஜித் பவாருக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்