Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜிப்மர் மருத்துவமனை, மருத்துவ கல்லூரியில் 10-வது பட்டமளிப்பு விழா

ஆகஸ்டு 26, 2019 06:54

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவகல்லூரியில் 10-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஜிப்மர் வளாகத்தில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் அரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு ஜிப்மர் தலைவர் விஷ்வ மோகன் கடோச் தலைமை தாங்கினார். 

இதில் சிறப்பு விருந்தினராக இந்திய அரசின் நீதி ஆயோக் உறுப்பினர் வினோத் குமார் பால் கலந்துகொண்டு மருத்துவபடிப்பு முடித்த 405 மருத்துவ மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். 

அதனை தொடர்ந்து சிறப்பு தகுதி பெற்ற 90 மாணவ மாணவிகளுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன் எம்பி மற்றும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்