Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மைசூர்: தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளுக்கு ரூ.68 லட்சம் இன்சூரன்சு

ஆகஸ்டு 25, 2019 05:04

மைசூர்: கர்நாடக மாநிலம் மைசூரில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு உலக புகழ்பெற்ற மைசூரு ‘தசரா’ விழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இந்த வருடம் அக்டோபர் மாதம் 8-ந் தேதி ‘ஜம்போ சவாரி’ எனப்படும் ‘யானைகள் ஊர்வலம்’ நடக்கிறது. விழாவில் 14 யானைகள் பங்கேற்கின்றன. இந்த யானைகளுக்கும், 14 பாகன்கள் மற்றும் 14 உதவியாளர்களுக்கும் அந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.68 லட்சம் இன்சூரன்சு செய்யப்பட்டுள்ளது.

இதில் யானைகளுக்கு ரூ.48 லட்சமும், 14 பாகன்கள் மற்றும் 14 உதவியாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ரூ.28 லட்சம் இன்சூரன்சு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக யானைகளுக்கு ரூ.44,840-ம் பாகன்களுக்கு ரூ.720-ம் பீரிமியம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த இன்சூரன்சு காலம் ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் 3 நாட்களுக்குள் அதற்குரிய இன்சூரன்சு தொகை வழங்கப்படும்.

தலைப்புச்செய்திகள்