Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாற்றுதிறனாளிக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்: அமைச்சர் துரைக்கண்ணு துவக்கி வைத்தார்

ஆகஸ்டு 24, 2019 01:32

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் மாற்றுதிறனாளிக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு துவக்கி வைத்தார். 

 பாபநாசத்தில் அரசு ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமில் பொது மருத்துவம் கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை, காதொலி கருவி, அன்னபிளவு, உதடுபிளவு, சக்கர நாற்காலி 37 மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தபோது, மாற்றுத்திறனாளிக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்டத்தில் 12 ஒன்றியத்திலும் மாற்றுத்திறனாளிக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமில் 1923 மாற்றுத் திறனாளிகள் பயன்பட்டுள்ளனார். மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. 

தற்போது. கல்லணையிலிருந்து கடைமடை வரைக்கும் தண்ணீர் திறந்து விடப்படும். நேரடி நெல்  விதைப்பு செய்வதற்கு உளவு மானியமாக 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லணையிலிருந்து விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தெரிவித்தார்.

இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன், மாவட்ட கல்வி அலுவலர் பாப்பம்மாள், காவல்துறை துணை கண்காணிப்பாளர் நந்தகோபால் மற்றும் வட்டாட்சியர் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்