Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு

ஆகஸ்டு 24, 2019 07:45

மதுரை: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பேராசிரியர் கர்ண மகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பல்கலைக்கழக பதிவாளரிடம் கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்திருந்தார். 

அதுகுறித்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழு பேராசிரியர் கர்ண மகராஜன் மீது மாணவி கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மை என அறிக்கையில் தாக்கல் செய்தது.

இதையடுத்து பல்கலைக்கழக ஆட்சிக்குழு சிண்டிகேட் கூட்டத்தில் பேராசிரியர் கர்ண மகாராஜன் மீது நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கடந்த 6 மாதங்களாக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்நிலையில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆட்சிக் குழுக் கூட்டம் திடீரென நேற்று கூடியது. இதில் பேராசிரியர் கர்ண மகராஜனை கட்டாய ஓய்வில் அனுப்புவது என்று அதிரடியாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்