Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருள்களை மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

ஆகஸ்டு 21, 2019 01:43

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் கடந்த ஆகஸ்ட் 2 தேதி முதல் அரசு தடை விதித்தது. 

இந்நிலையில் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் சுற்றுசூழல் துறை அதிகாரிகள் 20 பேர் 2  குழுக்களாக  புதுச்சேரியின் நகரப்பகுதியின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யபடுகின்றதா என  ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது 10க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனை செய்த கடைகளுக்கு எச்சரிக்கை செய்தனர். 

இந்த ஆய்வானது தொடர்ந்து நடைபெறும் எனவும் தடை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

தலைப்புச்செய்திகள்