Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சட்டப்பேரவை சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை: எதிர்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம்

ஆகஸ்டு 20, 2019 01:08

புதுச்சேரி: புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் காங்கிரஸ் 14, திமுக 3, சுயேட்சை-1 (ஆதரவு) சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 18 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. 

என்.ஆர் காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜக 3 என எதிர்கட்சிகள் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் எதிரக்ட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. 

அப்போது 3 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், மக்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கவில்லை என்றும் மோசமான ஆட்சி நடப்பதாக ரங்கசாமி குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் இன்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி தலைமையில்  எதிர்கட்சி  சட்டமன்ற உறுப்பினர்கள்  சட்டசபை செயலர் வின்செண்ட் ராயரை சந்தித்து சபாநாயகர் சிவக்கொழுந்து மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் கடிதத்தை அளித்தனர். இதனால் சட்டசபை வளாகம் பரபரப்பானது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி நடுநிலையோடு செயல்பட வேண்டிய சபாநாயகர், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்றும், அவரது செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லை என்பதால் கடிதம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்