Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவின் பால் விலை உயர்வு குறித்து பேச திமுகவிற்கு அருகதை கிடையாது: அமைச்சர் பாண்டியராஜன்

ஆகஸ்டு 20, 2019 12:44

ஆவடி: ஆவடி தொகுதியில் உள்ள குளங்கள் களை 70 லட்ச ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்தார். 

தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பசுமை ஆவடி திட்டதின் கீழ் ஆவடியில் புள்ள பட்டபிராம், சேக்காடு  மிட்டன் மில்லி ஆவடி, போன்ற குளங்களை தூர்வாரி அழகு படுத்தும் பணியை அமைச்சர் பாண்டியராஜன் ஈடுபட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக ஆவடியில் சேர்க்கடு சிரத்தம்மன் கோவில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கிவைத்தார். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது: ஆவின் பால் உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் இருக்கும் போது எதையும் சரிசெய்யமாமல் தற்போது எதிர் கட்சியாக இருக்கும்போது அரசை குறை கூறி கொண்டு வர்கின்றனர். 

எனவே பால் உயர்வு பற்றி பேச திமுகவிற்கு அருகதை கிடையாது என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வியில் தமிழ் மொழி, முதுகலை பாடபிரிவில் தமிழ் மொழி அழிக்கபட்டது என்பன போன்ற எந்தகவலும் இல்லை.

எனினும் இது குறித்து காமராஜர் பல்கலைக்கழக முதல்வர் தன்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். அவருடன் பேசி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ் அப்துல் ரஹீம் ஆவடி நகர கழக செயலாளர் தீனதயாளன், அண்ணா தொழிற்சங்க திருவள்ளூர் மாவட்ட செயலாளர் முல்லை தயாளன், ஆவடி நகர மாணவர் அணி யாமத் மற்றும் கமல் அரசு அதிகாரிகள் ஆவடி மாநகராட்சி பொறியாளர் வைத்தியலிங்கம், உதவி பொறியாளர்கள் மோகன் .சங்கர் மற்றும் சுகாதார  ஆய்வாளர் மோகன்,  சுகாதார  துணை ஆய்வாளர்கள்  பிரகாஷ்,  சிவக்குமார்  மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்