Monday, 3rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு

ஆகஸ்டு 20, 2019 08:31

பெங்களூரூ: கர்நாடகாவில் கடந்த மாதம் 26-ம் தேதி குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து பாஜகவின் எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றார்.  அப்போது முதல் சுமார் 20 நாட்களுக்கும் மேலாக அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை டெல்லியில் அமித்ஷாவை எடியூரப்பா சந்தித்து பேசினார்.

அப்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்வது குறித்து அமித்ஷா இறுதி ஒப்புதல் அளித்தை அடுத்து, இன்று காலை புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

கர்நாடக அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் இடம்பெற முடியும் என்ற நிலையில், முதற்கட்டமாக அமைச்சர்கள் 17 பேர் மட்டும் இன்று பதவியேற்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் அமைச்சர்கள் கே. எஸ். ஈஸ்வரப்பா, பசவராஜ் பொம்மை மற்றும் கட்சி மாறி வந்த ஹெச். நாகேஷ் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்