Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விபத்துக்குள்ளான வாலிபரை 108 மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினார் மாஃபா பாண்டியராஜன்

ஆகஸ்டு 19, 2019 01:01

திருவள்ளூர்: திருவேற்காடு நூம்பல் பகுதியில் உள்ள திருவீதி அம்மன் ஆலயத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை சார்ந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்  கலந்து கொண்டு விட்டு மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நூம்பல் சாலையில் வடமாநில வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது அப்போது எதிர்பாராதவிதமாக குறுக்கே நாய் சென்றதால் நாய் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி உள்ளார்.

இப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை பார்த்த அவ்வழியே சென்ற அமைச்சர் தனது காரை நிறுத்தி உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

108 ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதமானது. மீண்டும் மாவட்ட ஆட்சியருடன் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்பேரில் உடனடியாக ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது ஆம்புலன்ஸ்  காலதாமதம் ஆனதால் தனது காரில் வாலிபரை ஏற்றும்படி அமைச்சர் உதவியாளரிடம் கூறினார்.

அப்பொழுது 108 வாகனம் வந்து விட்டது. பின்னர் வாலிபரை 108 வாகனம் மூலம் சென்னை பொது  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு சென்றார். இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் அமைச்சரை பாராட்டியதோடு மனிதநேயமிக்க அமைச்சரின் இச் செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்