Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தோஹா ஆசிய தடகள ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்றவருக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி

ஆகஸ்டு 19, 2019 11:25

சென்னை: தோஹா ஆசிய தடகள ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், வலிதியூரைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தரும் வகையில் சாதனை படைத்துள்ளதாக பாராட்டிய ஸ்டாலின், அவரை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் வகையில் திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவுக்கு, 5 லட்சத்துக்கான காசோலையை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்