Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சக்தி வாய்ந்த குழுக்கள்: காஷ்மீருக்காக இந்தியா எடுத்துள்ள அதிரடி திட்டம்

ஆகஸ்டு 18, 2019 07:17

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவதற்காக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு அங்கு சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆக போகிறது. அங்கு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. நாளையில் இருந்து அங்கு பள்ளிகள் கல்லூரிகள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று மாலையில் இருந்து அங்கு தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. 

ஆனாலும் காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். காஷ்மீரில் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளை செய்ய வேண்டும். இதனால் மத்திய அரசு காஷ்மீருக்கு அதி சக்திவாய்ந்த நான்கு குழுக்களை தற்போது அனுப்பி வைக்க இருக்கிறது. நான்கு முக்கியமான பணிகளை கவனிக்க இந்த குழுக்கள் அனுப்பப்படும்.

# முதல் குழுவை ஆட்சியாளர்களை கவனித்துக் கொள்வதற்காக அனுப்பி வைத்துள்ளனர். முக்கிய, அனுபவம் வாய்ந்து ராணுவ அதிகாரிகளை கொண்ட இந்த குழு காஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகள், முன்னாள் ஆட்சியாளர்கள் ஆகியோரை கண்காணிப்பார்கள். அரசியல்வாதிகள் யாரும் புரட்சி செய்யாமல், மக்களை திரட்டாமல் இந்த குழுவினர் பார்த்துக் கொள்வதற்காக காஷ்மீர் சென்றுள்ளனர்.  

# அடுத்த குழுதான் மிகவும் சக்தி வாய்ந்தது. மிகவும் திறமையான ராணுவ வீரர்கள் இந்த குழுவில் இருப்பார்கள். இவர்களுக்கு அளப்பரிய சுதந்திரம் உள்ளது. அதன்படி காஷ்மீரில் இருக்கும் கிளர்ச்சியாளர்களை கைது செய்ய, என்கவுண்டர் செய்ய இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் யாரை வேண்டுமானாலும் கைது செய்து விசாரிக்கலாம்.

# அதற்கு அடுத்த குழு பேச்சுவார்த்தை செய்ய கூடியது. இவர்கள் காஷ்மீரில் வீடு வீடாக சென்று ராணுவத்தினர் மீது கல்லெறியும் இளைஞர்கள் உடன் பேச்சுவார்த்தை செய்ய இருக்கிறார்கள். இளைஞர்கள் ராணுவத்தினர் மீது கல்லெறிந்து போராட்டம் நடத்துவதை அமைதியாக நிறுத்தும் வகையில் இந்த குழு செயல்பட உள்ளது. 

# கடைசி குழு கடைசி குழுதான் முக்கியமானது. இந்த குழு காஷ்மீரில் உள்ள மத தலைவர்களை கைது செய்ய இருக்கிறது. முதலில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும். அது நடக்காத நிலையில் அவர்களை இந்த குழு கைது செய்யும். எவ்வளவு பெரிய மத போதகராக இருந்தாலும் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள். 

இந்த நான்கு குழுக்கள் மூலம் காஷ்மீரில் அமைதி நிலைநாட்டப்படும் என்று மத்திய அரசு நம்புகிறது.
 

தலைப்புச்செய்திகள்