Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

என்எல்சி நிறுவனத்தில் 73 வது சுதந்திர தின விழா

ஆகஸ்டு 15, 2019 11:39

கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தில் 73 வது சுதந்திர தின விழா பாரதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கி தேசிய கொடியை என்எல்சி சேர்மன் ராகேஷ் குமார் ஏற்றிவைத்தார். 

பின்னர் அவர் பேசுகையில், என்எல்சி நிறுவனம் தற்போது 3840 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது இது வரும் 5 ஆண்டுகளில் 60 சதவீதம் வளர்ச்சி அடைந்து 5193 மெகாவாட்டாக அதிகரிக்கும்.

மேலும் இந்திய அரசின் தேசிய சூரிய ஒளி மின் திட்டம் மற்றும் பசுமை மின்சக்தி முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் நமது நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்குள் நாலாயிரத்து 251 மெகாவாட் அளவிற்கு புதுப்பிக்க வல்ல எரிசக்தி மின் திட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் நிலையை எட்டியுள்ளது என அவர் கூறினார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நிறுவனத்தில் பணியாற்றும் பலருக்கு விருது மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்