Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சருக்கு விருந்து

பிப்ரவரி 22, 2019 06:48

சென்னை: திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு டாக்டர் ராமதாஸ் இன்று(வெள்ளிக்கிழமை) விருந்து அளிக்கிறார்.  

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு டாக்டர் ராமதாஸ் இன்று(வெள்ளிக்கிழமை) விருந்து அளிக்கிறார். அப்போது பா.ம.க. போட்டியிடும் 7 தொகுதிகள் எவை? என்பது முடிவாக வாய்ப்புள்ளது.  

நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அதிக இடங்களை பெற்றுள்ள கட்சியாக பா.ம.க. இருக்கிறது.  

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் பா.ம.க.வுக்கு மக்களவை தொகுதியில் 7 இடங்களும், மாநிலங்களவையில் ஒரு இடமும், பா.ஜ.க.வுக்கு 5 மக்களவை தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  

பா.ம.க., பா.ஜ.க. கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தம் முடிந்தவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை அடையாறு கிரீன்வேயிஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகளுக்கும், பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட நிர்வாகிகளுக்கும் தேனீர் விருந்து அளித்தார்.  

இந்தநிலையில் அ.தி.மு.க.- பா.ம.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் வெற்றிகரமாக நடந்ததற்காக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விருந்து அளிக்கிறார்.  

இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மாலை 6 மணியளவில் தைலாபுரம் தோட்டம் செல்கிறார்கள். இதுதொடர்பாக டாக்டர் ராமதாசிடம் கேட்டபோது, ‘பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 7 தொகுதிகள் எந்தெந்த இடங்கள் என்பது குறித்து நாளை (இன்று) முடிவாகிட அதிக வாய்ப்பு இருக்கிறது.’ என்று அவர் தெரிவித்தார்.  
 

தலைப்புச்செய்திகள்