Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.45 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி முறைகேடு

ஆகஸ்டு 13, 2019 03:37

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் 2018-19 பல்வேறு நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வரியை முறையாக செலுத்தாமல் பல குளறுபடிகள் மூலம் ரூ.45 ஆயிரம் கோடி வரை ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரி என்ற முறைப்படி மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை என்ற புதிய வரியை அறிமுகம் செய்தது. இந்த வரிக்கு பல்வேறு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மத்திய அரசு கடும் நடவடிக்கையாக இந்த வரி சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இந்த வரி வரம்பிற்குள் வருவதற்கு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சற்று சுணக்கம் காட்டியது.

ஜி.எஸ்.டி வரியை செலுத்தாமல் எத்தனித்து வருவது குறித்து நிதி துறை அமைச்சகம் ஒரு சிறப்பு பிரிவை அமைத்தது. இந்த பிரிவு நடத்திய ஆய்வு மற்றும் ரெய்டு மூலம் நாடு முழுவதும் ரூ. ரூ.45 ஆயிரம் கோடி வரை ஏய்ப்பு செய்துள்ளதாக
கண்டறியப்பட்டுள்ளது.

போலி ரசீதுகள் தயாரித்ததன் மூலம் 8 ஆயிரம் கோடிக்கு ஜிஎஸ்டி எத்தனிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது போன்று செயல்பட்ட நிறுவனங்களிடம் இருந்து ரூ.736 கோடியை வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தற்போதைய நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி முறைகேடு நடத்திய நிறுவனங்களில் மொத்தம் இதுவரை 37 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நிதி அமைச்சக தகவலின்படி ரூ. 25 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரியாக மீட்கபட்டுள்ளன. மொத்தம் ரூ.45 ஆயிரம் கோடி வரை ஏய்ப்பு நடந்துள்ளது . இது தொடர்பாக 37 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

பொதுவாக வரி ஏய்ப்பை கண்டுபிடிப்பதில் வரித்துறையினர் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளதாகவும் அந்த துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். 

தலைப்புச்செய்திகள்