Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காயத்ரி காளியம்மன் கோயிலில் ஆடிமாத திருவிழா

ஆகஸ்டு 11, 2019 02:56

கும்பகோணம்:  கும்பகோணத்தில் கக்கன்காலனி அருகிலுள்ள இலுப்பையடி தர்மராஜ திரவுபதி அம்மன் கோயிலில் உள்ள காயத்திரி காளியம்மனுக்கு ஆடிமாதத்தினை முன்னிட்டு திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 

அதன்படி கடந்த 3 ம் தேதி மாலை  அம்மனுக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன்  விழா தொடங்கியது. அன்று முதல் நடைபெற்று வரும் இந்த விழாவில் தினமும்  காயத்ரி காளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் நடைபெற்று வருகிறது.  

விழாவின் முக்கியத் திருநாளான  காயத்ரி காளியம்மன் திருநடன உற்சவக்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு மாலைகள், எலுமிச்சைபழம் ஆகியவற்றை வழங்கினர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

பின்னர் கோயிலிருந்து காளி புறப்பட்டு காவிரி கரையை அடைந்தது. காளியம்மன் உடன் 200க்கு மேற்பட்ட பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பால்குடம்  அரிவான் கடபலி,  காவடி, அக்னி கொப்பரையுடன் சக்தி கரகத்துடன்  புறப்பட்டு திருநடனக்காட்சி நடைபெற்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது.

13ம்தேதி காயத்ரி காளியம்மன் பிறந்த இடத்திலிருந்து ஆலயம் வந்தடைதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7ம் தேதியன்று காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வரும் 16ம்தேதி மாலை காயத்திரி ஜபம், மூலமந்திரம், காயத்திரி ஹோமம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் முருகன் சகோதரர்கள் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்